ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து பலி!
One and a half year old boy dies after falling into water tank
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் கோவை வடவள்ளியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த தம்பதி தினேஷ்குமார், பிரியங்கா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதி லிங்கேஸ்வரன் என்ற மகன் உள்பட 3 குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் பிரியங்கா தனது குழந்தைகளுடன் வடவள்ளி சி.எஸ்.நகரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற போது அங்கு வீட்டின் அருகே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது குழந்தை ஆதி லிங்கேஸ்வரன் திறந்த நிலையில் இருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுதுள்ளான் . இதையடுத்து குழந்தை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்த பிரியங்கா தண்ணீர் தொட்டி திறந்து கிடந்ததை கண்டு சந்தேகமடைந்த அவர் தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தார். அப்போது குழந்தை மயங்கிய நிலையில் கிடந்தது.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
One and a half year old boy dies after falling into water tank