சுடு தண்ணீர் கொட்டி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சுடு தண்ணீர் கொட்டி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் பரத்குமார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் அரிகரன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், பரத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளிப்பதற்காக சூடு தண்ணீரை எடுத்து வைத்துள்ளார்.

அப்போது, அரிகரன் பொற்றோர்கள் கவனிக்காத நேரத்தில் சூடு தண்ணீர் ஊற்றி வைத்திருந்த பாத்திரம் அருகே நடந்து சென்று எதிர்பாராத விதமாக அந்த பாத்திரத்தை கீழே தள்ளியுள்ளார். இதில் பாத்திரத்தில் இருந்த சூடு தண்ணீர் குழந்தையின் மீது கொட்டியது. 

இதில் படுகாயமடைந்து குழந்தை வலி தாங்கமுடியாமல் அலறி துடித்துள்ளது. இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தை அரிகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் சூடு தண்ணீர் கொட்டி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one and half years old boy died for hot water pouring


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->