சேலம்: பிறந்து ஒரே நாளான ஆண் குழந்தை ஓடையில் வீச்சு.! தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் பிறந்து ஒரே நாளான ஆண் சிசு ஓடையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி ஆலமரத்து காடு பேருந்து நிறுத்த பகுதியில் உள்ள ஓடையில் பிறந்து ஒரே நாளான ஆண் சிசு ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதைப்பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சடைந்து இதுகுறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த ஆண் சிசுவை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிறந்து ஒரே நாளான ஆண் சிசுவை ஓடையில் வீசி சென்றது யார்? எதற்காக வீசி சென்றார்கள்? என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One day old baby boy thrown into stream in salem


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->