சவுக்கு சங்கருக்கு ஒரு நாள் போலீஸ் காவல் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பெண் போலீசாரை பற்றி அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

இதற்கிடையே, உதகை அருகே புதுமந்து காவல்நிலைய ஆய்வாளர் அல்லி ராணி என்பவர் அளித்த புகாரில் சவுக்கு சங்கர் மீது, உதகை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி தமிழ் இனியன் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

 

அந்த விசாரணையின் போது, சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர்கள் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தததை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனே அரசு தரப்பில் சவுக்கு சங்கரை விசாரிக்க வேண்டியிருப்பதால் ஐந்து நாட்கள் போலீஸ் காவல் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். அதன் படி போலீசார் சவுக்கு சங்கரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one day police custody to savukku sangar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->