சத்தியமங்கலத்தில் 1 கிலோ மல்லிகைப் பூ 490 ரூபாய்க்கு விற்பனை.! - Seithipunal
Seithipunal


சத்தியமங்கலத்தில் 1 கிலோ மல்லிகைப் பூ 490 ரூபாய்க்கு விற்பனை.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் அருகே கரட்டூர் சாலையில், பூ சந்தை உள்ளது.  பல பகுதிகளில் இருந்து இந்த பூ சந்தைக்கு பூக்கள் கொண்டுவரப்படுகிறது. 

இந்த பூ சந்தையில், தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும். இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. 

இதற்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 4½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.490-க்கும், முல்லை ரூ.140-க்கும், காக்கடா ரூ.825-க்கும், செண்டுமல்லி ரூ.55-க்கும், பட்டுப்பூ ரூ.69-க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும், சம்பங்கி ரூ.20-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கு ஏலம் விடப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one kg jasmine flower 490 rupees at saththiiyamangalam market


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->