1 லட்சத்து 8 வடை மாலையில் ஜொலிக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் - அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டத்தின் மையப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினசரி அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பூஜையில், தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில பக்தர்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

அதுமட்டுமல்லாமல், இந்தக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு 1 லட்சத்து 8 வடை மாலை ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 11 மணி வரை வடை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின்னர் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் தொடங்கி நடந்து முடிந்தது. இதனையடுத்து ஆஞ்சநேய சாமி பிற்பகல் 1 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய ஏதுவாக கட்டண தரிசன வழி மற்றும் இலவச தரிசன வழி என்று மொத்தம் மூன்று வழிகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one lakhs and eight vadai malai in namakkal anjaneyar temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->