சூடு பிடிக்கும் வேங்கைவயல் விவகாரம்.."நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு".. களமிறங்கும் ஓய்வு பெற்ற நீதிபதி..!!
One man commission inquiry into Vengaivyal issue begin on may6
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி வேங்கைவயல் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கு பின்னர் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் இதுவரை 147 சாட்சிகளிடம் விசாரணை நடத்திய நிலையில் புதுக்கோட்டை நீதிமன்றத்தின் மூலம் சந்தேகிக்கும் நபர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி பெற்றனர். இந்த நிலையில் 115 நாட்களைக் கடந்தும் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு விட கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இந்த ஆணையம் அடுத்த இரு மாதகத்திற்குள் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் விசாரணைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் வரும் மே 6ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலுக்கு செல்ல உள்ளனர். விசாரணை ஆணையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஏற்பாடு செய்ய தொடங்கியுள்ளது.
English Summary
One man commission inquiry into Vengaivyal issue begin on may6