நடைபாதையில் தங்கவைக்கப்பட்ட ஒரு மாத குழந்தை - சிவகங்கை மருத்துவமனையில் நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாண்டி என்பவருக்கு சிநேகா என்ற பெண்ணுடன் திருமணமாகி தற்போது தலைபிரசவம் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

இந்தக் குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆனநிலையில் சிநேகாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சைக்காக காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் சிநேகாவுக்கு காய்ச்சல் தீவிரமடைந்ததையடுத்து, அவர் உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சினேகா சிகிச்சை பெற்று வருகிறார். 

இதற்கிடையே குழந்தை தாய்ப்பால் அருந்துவதால் சினேகாவின் குடும்பத்தினர் குழந்தையையும் மருத்துவமனைக்கு உடன் அழைத்து வந்துள்ளனர். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் அந்த குழந்தைக்கு பாதுகாப்பான இடம் அளிக்காமல் தீவிர சிகிச்சை பிரிவு வாயிலில் உள்ள நடைபாதை ஓரமாக தங்க வைத்துள்ளனர். 

சுமார் இரண்டு நாட்களாக உரிய பாதுகாப்பின்றி நோய் பரவும் அபாயத்துடன் குழந்தை நடைபாதையில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one month born baby left outside in sivakangai hospital


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->