தமிழகத்தில் புதிய உச்சம்.."அறிவிக்கப்படாத மின்வெட்டு"..! பொதுமக்கள் கடும் அவதி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தினசரி மின் பயன்பாடு புதிய உச்சத்தை தொட்டுள்ளது..!!

தமிழகம் தமிழகம் முழுவதும் குடியிருப்புகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என 2.67 கோடி மின் நுகர்வோர்கள் இருந்து வரும் நிலையில் விவசாய பயன்பாட்டிற்கு மட்டும் நாளொன்றுக்கு 2500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் மாநிலத்தின் தினசரி மின் தேவையானது சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருந்து வந்தது. 

இந்த அளவானது கோடை காலங்களில் 16 ஆயிரம் மெகாவாட்டாகவும் குளிர்காலங்களில் 12 ஆயிரம் மெகவாட்டாகவும் காணப்படும். தற்பொழுது தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்களிடையே ஏசி, மின்விசிறி, ஏர்கூலர் போன்ற மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முழுவதும் 1.5 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகளை தமிழக அரசால் வழங்கப்பட்டதன் காரணமாக கூடுதலாக 727 மெகாவாட் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மார்ச் 4 ஆம் தேதி தினசரி மின் தேவை 17,584 மெகாவாட்டாக அதிகரித்தது. இதுவரை கடந்த 2022 ஏப்ரல் 19ஆம் தேதி 17,563 மெகாவாட் என்பதே அதிகபட்ச ஒரு நாள் தேவையாக இருந்தது.

தற்போதைய  விவசாயிகளுக்கு 18 மணி நேர மின்விநியோகம், பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு போன்ற காரணங்களால் மார்ச் 15ஆம் தேதி முதல் தினசரி மின் தேவையானது அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஏப்ரல் 6ம் தேதி தினசரி மின் நுகர்வானது 18,252 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையே தமிழகத்தில் எந்த மின்தடையும் இல்லாமல் இந்த உச்சபட்ச தேவையை ஈடு செய்யப்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்து இருந்தார்.

ஆனால் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தினமும் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் கடும் அவதிக்கு ஆளாவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oneday power consumption in Tamil Nadu has reached new hike


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->