ஆன்லைன் சூதாட்டத்திற்கு இடைக்கால தடையா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வழக்கில் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த வழக்கை பொறுத்தவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றால், தமிழக அரசன் பதில் மனுவை பெற வேண்டும். அதுவரை இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இறுதியாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை நீக்க கோரிய இந்த வழக்கை வருகின்ற ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு விசாரணையின்போது, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பதில் என்ன தவறு? ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் மரணங்கள், குடும்பங்கள் வறுமையில் வாடுவதையும் தடுக்கவே தடை சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், மக்கள் நலன் தான் மிக முக்கியம் என்றும், மக்களை பாதுகாக்கவே சட்டம் இயற்றப்பட்டதாக தமிழக அரசு கூறியதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

அப்போது, இந்த தடைச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு வாதம் வைத்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Online Gambling case chennai HC order 270420233


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->