ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம்! மசோதாவை தாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் சற்றுமுன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு மீண்டும் தடை சட்டம் கொண்டுவர தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்து, உரையாற்றி வருகிறார். 

 

அவரின் உரையில், "ஆன்லைன் சூதட்டத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, முதலில் இயற்றப்பட்ட சட்ட மசோதா, ஆளுநர் எழுப்பிய கேள்விகள் ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரின் உரையில், "மாநில எல்லைக்குள் மக்கள் அனைவரையும் காக்க, மாநில அரசுக்கு உரிமை உண்டு. மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு.

சட்ட ஒழுங்கைப் பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசின் மிக முக்கியமான கடமை. ஆன்லைன் ரம்மிக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து 10,735 மின்னஞ்சல் பெறப்பட்டன.

இதயமுள்ளவர்கள் யாரும், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், மீண்டும் தாக்கல் செய்யப்படும் இந்த 
மசோதா மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு இன்றே நிறைவேற்றப்பட உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online Gambling law bill TN Assembly March 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->