தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இனி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தலாம்.. அமைச்சர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே ரேஷன் பொருட்கள் விற்பனை தமிழ்நாட்டில்தான் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் மாநிலம் முழுக்க பெருவாரியான மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டையை பொறுத்து பொருட்கள் வழங்கப்படும் வீதமும், அளவும் மாறி வருகின்றது.

இந்நிலையில், நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஏ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி விலையை நியாயவிலைக் கடைகளாக மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலியிடங்கள் இருப்பின் 10 முதல் 50 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட உணவுப் பொருள் கிடங்குகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை பெற மக்கள் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே இலக்கு என்றும் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில் 5 கிலோ, 2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களை எவர்சில்வர் கொள்கலங்களில் வைத்து விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அத்தியாவசிய பொருள்கள் உள்ள மூட்டைகளை தரையில் வைப்பதற்கு பதில் இரும்பு ஷெல்ஃபுகளில் அடுக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Online pay will introduce in TN rationshop


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->