ஊட்டி மலர் கண்காட்சி.. 5 நாட்களில் ரூ.10 கோடிக்கு மது விற்பனை.. நீலகிரி டாஸ்மாக் நிர்வாகம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு கடந்த 5 நாட்களில் ரூ. 10 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி நடந்தது. கடந்த 20ஆம் தேதி தொடங்கிய மலர் கண்காட்சி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.

இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு வகையான மலர்களை கொண்டு பல வண்ண அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. இதனை கண்டு ரசிப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். இதனால் ஊட்டி நகரமே களைகட்டி காணப்பட்டது.

இந்தநிலையில் மலர்க்கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டும் மது விற்பனை ரூ.10 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து நீலகிரி டாஸ்மாக் நிர்வாகிகள் தெரிவித்ததாவது, நீலகிரியில் 75 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டியில் சீசன் தொடங்கியதை அடுத்து மதுக்கடைகளில் கூடுதலாக மதுவகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

தினமும் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.1.80 கோடி ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் ஊட்டி சீசனையொட்டி கடந்த ஒரு மாதமாக சராசரி மது விற்பனை அதிகரித்தது.

இதில் மலர்க்கண்காட்சி நடைபெற்ற மே 20ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அந்த சமயங்களில் மது விற்பனையும் அதிகரித்தது. மலர் கண்காட்சி நடைபெற்று 5 நாட்களில் மது விற்பனை அதிகரித்து 10 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ooty Flower Exhibition Liquor sale for Rs 10 crore in 5 days


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->