லஞ்ச பணத்துடன் காரில் சென்ற நகராட்சி ஆணையர் - மடக்கி பிடித்த போலீசார்.. கையும் களவுமாக சிக்கிய அவலம்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியின் ஆணையராக பதவி வகித்து வருபவர் ஜஹாங்கீர் பாஷா. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் பேரிடர் அபாயம் நிறைந்த ஊட்டி நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அரசின் விதிமுறைகளை மீறி தனியாருக்கு சில அனுமதிகளை ஆணையர் வழங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆணையர் ஜஹாங்கீர் வார விடுமுறையை கழிப்பதற்காக நேற்று முன்தினம் மாலை காரில் சொந்த ஊருக்கு கிளம்பியிருக்கிறார். அந்தக் காரில் பல லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை ரகசியமாக அவர் எடுத்துச்‌ செல்வதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போலீசார் ஆணையரின் காரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் நடத்திய சோதனையில், காருக்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பது தெரிய வந்துள்ளது. உடனே ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை குறித்து தெரிவித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்ததாவது, "கட்டடங்கள் புனரமைப்பு, அனுமதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வந்திருக்கிறது. அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ooty muncipal commissioner arrested for bribe


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->