கனமழை எதிரொலி - ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து.! - Seithipunal
Seithipunal


இரண்டு நாட்களுக்கு உதகை மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12 மணிக்கு உதகை சென்றடைகின்றது. 

யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த இந்த மலை ரெயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து, மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ooty train cancelled for rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->