மழை எதிரொலி - 3 நாட்களுக்கு ஒட்டி மலை ரெயில் ரத்து.! - Seithipunal
Seithipunal


மூன்று நாட்களுக்கு ஊட்டி மலை ரெயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு ஊட்டியை சென்றடைகின்றது. 

இந்த ரெயிலில் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் பெஞ்ச்ல புயல் காரணமாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன் படி கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலை ரெயில் சேவை இன்று முதல் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ooty train cancelled in three days for rain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->