நடுவழியில் நின்ற மலை ரயில் - சுற்றுலா பயணிகள் அவதி.!
ooty train stoped midway for engine problam
சுற்றுலா தளங்களில் முதன்மையான நீலகிரி மாவட்டத்திற்கு ஒவ்வொரு வருடமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் தற்போது அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரிய மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் மலை ரயில் கிளம்பியது.
அதன் படி இந்த மலை ரயில் ஆர்டர்லி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென ரயிலின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு, பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பணியாளர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் படி அவர்கள் விரைந்து வந்து ரயில் என்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதனை சீர்செய்ய முடியாததால் மாற்று எஞ்சின் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, மலை ரயில் சுமார் மூன்றேகால் மணி நேரம் தாமதமாக குன்னூர் ரயில் நிலையத்தை வந்து அடைந்தது. இந்த சம்பவத்தால், பயணிகள் தங்களது பயணத்தை நிறைவாக முடிக்காத சூழல் உருவானது.
English Summary
ooty train stoped midway for engine problam