கனமழை, சூறாவளி! பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி கோரும் ஓபிஎஸ்! - Seithipunal
Seithipunal


பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அண்மையில் திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், உயிரிழப்புகளைத் தவிர்க்க தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்திடவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையிலும், "சேதமடைந்த பகுதிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றாலும், அவர்கள் அரசுக்கு பரிந்துரை செய்து அதன் அடிப்படையில் இழப்பீடு மற்றும் நிவாரண உதவியை வழங்குவதற்கு காலதாமதம் ஏற்படும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். 

இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் விவசாயிகள் சங்கம் நடத்தியுள்ளது. இருப்பினும், அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை.

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அண்மையில் திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்கவும், உயிரிழப்புகளைத் தவிர்க்க தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்திடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓ. பன்னீர்செல்வம் கேட்டு கொண்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS Request to TNGovt for Farmers may 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->