ரூ.82.32 கோடி வரி ஏய்ப்பு நோட்டீஸ்.. எதிர் மனுவை வாபஸ் பெற்றார் ஓபிஎஸ்..!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.82.32 கோடி வரி செலுத்த தவறியதாக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் தனக்கு அனுப்பிய நோட்டீஸ் மீது மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வருமான வரித்துறையினரிடம் மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வருமானவரித்துறையினர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து வருமானவரித்துறையில் மேல்முறையீடு  செய்துள்ளதால் இந்த மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்ப பெற அனுமதித்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS withdrew petition against notice sent by IT dept


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->