முகநூல் காதல், 40 வயதில் கர்ப்பமான 22 வயது மகனின் தாய்.. ஒரத்தநாட்டை உலுக்கிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கவரப்பட்டு மேல தெருவில் லலிதா என்ற நபர் தனது மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ஐயப்பன் வெளிநாட்டில் இருந்த நிலையில் இவர்களுக்கு 21 வயது மற்றும் 22 வயதில் வளர்ந்த மகன்கள் இருக்கின்றனர். 

மகன்கள் இருவரும் கல்லூரி விடுதியில் படித்து வரும் நிலையில் கணவரும் வெளிநாட்டில் வேலை செய்ததால் தனிமையில் இருந்த லலிதா பேஸ்புக்கில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞருடன் பழக ஆரம்பித்தார். 

இந்த பழக்கத்தினால் கடலூர் வாலிபர் கடலூரில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்து அங்கே வாடகைக்கு ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்த ஆரம்பித்து, லலிதாவின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் வந்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

தற்போது லலிதா நான்கு மாத கர்ப்பிணியான நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டில் இருந்த பணம் மற்றும் 20 பவுன் நகைகளை எடுத்துக் கொண்டு ஓடி சென்று திருமணம் செய்துள்ளனர். 

இந்த விஷயம் கணவருக்கு தெரிய வந்த நிலையில் மகன்களை வைத்து அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

orathanadu marriage women marry cuddalore youngster who loved way of facebook


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->