#பெரம்பலூர் : உடல் உறுப்பு தானம் செய்த தூய்மை பணியாளர் உடலுக்கு அரசு மரியாதை.!! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம் விசுவகுடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (58). பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் 19ம் தேதி எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். 

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மூளை சாவு அடைந்ததாக கூறியுள்ளனர். இதனை அடுத்து அவரது மனைவி தனலட்சுமி (வயது 52) கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்துள்ளார்.

உடல் உறுப்புகளை தானம் செய்யும் நபர்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தியாக வேண்டும் என்ற அரசின் உத்தரவுப்படி, நேற்று விசுவக்குடியில் அரசு மரியாதை உடன் கிருஷ்ணன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Organ donate men body government respect


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->