#விழுப்புரம் || சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 30க்கும் மேற்பட்டோர் காயம் - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து பயணிகளுடன் நெய்வேலி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது பஞ்சமாதேவி பகுதியில், எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் தவிர்க்க முயன்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒரு பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 30 injured after private bus overturns in a roadside ditch in Villupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->