ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு என கூறி10 கோடிக்கு மேல் மோசடி...வாலிபர் கைது!  - Seithipunal
Seithipunal


ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி, பல்வேறு நபர்களை ஏமாற்றி சுமார் 10 கோடிக்கு மேல் மோசடி செய்த வாலிபரை புதுச்சேரி சைபர் கிரைம் போலிசார் கைது செய்தனர்.

கடந்த 13.12.2024 அன்று  புதுச்சேரியை சேர்ந்த சரவணன் த/பெ முனுசாமி என்பவர் இணைய வழி காவல் நிலையம் வந்து, அறிமுகமில்லாத நபர் ஒருவர் வாட்ஸ்-ஆப் மூலமாக தொடர்புக்கொண்டு, ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் என்று கூறி, புகார்தாரரிடம் ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.1,69,00,000/- பணத்தை பெற்றார். அவர் அந்த பணத்தை பெற்றபின்னர், புகார்தாரர் மேற்படி நபரிடம் மேற்படி வர்த்தகம் மூலம் முதலீடு செய்த பணத்தை பற்றியும், அதன் மூலம் வரும் லாபத்தை பற்றியும் விசாரித்தபோது அந்த நபர் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் போனை துண்டித்துவிட்டார். இது சம்மந்த்மாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு.B.C. கீர்த்தி அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதன்படி, சைபர் கிரைம் போலிசார் மேற்கொண்ட நுணுக்கமான விசாரணையிலும், குற்ற வழக்கு சம்மந்தமான ஆவணங்களையும் சேகரித்து, சைபர் தடயவியல் கருவிகளின் உதவியுடன் தொழில்நுட்ப பகுப்பாய்வு செய்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை அறியப்பட்டது.  இது தொடர்பாக, திரு. நாரா சைதன்யா, IPS, முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், டாக்டர் பாஸ்கரேன், காவல் கண்காணிப்பாளர் (சைபர் கிரைம்) அவரின் வழிகாட்டுதலின்படியும், திரு. எஸ். தியாகராஜன் மற்றும் திரு. பி.சி. கீர்த்தி ஆகியோரின் தலைமையின் கீழ் குற்ற சாட்டப்பட்ட நபரான சௌந்தரராஜனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், மேற்படி குற்ற சாட்டப்பட்ட நபர், தான் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி, பல்வேறு நபர்களை ஏமாற்றிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இவ்வழக்கின் மேற்கொண்ட விசாரணையின் மூலம் கிடைத்த தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர் இதுபோன்று 11-க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியது தெரியவந்தது, மேலும், மோசடி தொகை சுமார் 10 கோடிக்கு மேல் உள்ளது என்றும், மேற்படி குற்றம் சாட்டப்பட்ட ஏற்கனவே புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் பெரிய கட காவல் நிலையத்தில் இரண்டு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரியவந்தது. இதனுடன், குற்றம் சாட்டப்பட்ட வங்கிக் கணக்குகளின் விவரங்களைச் சேகரிப்பதன் மூலம், மேலும் சைபர் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை பகுப்பாய்வு செய்ய வேண்டியிருந்தது. மேலும், இந்த வழக்கில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதால், ஷேர் மார்க்கெட் வர்த்தகம் குறித்த விவரங்கள் வெளிவர வேண்டும். இந்த ஊழலில் மற்ற மோசடி செய்பவர்கள் வெளிக்கொணர இன்னும் விரிவான விசார்னை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது பற்றி இணைய வழி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. நாராசைதன்யா ஐபிஎஸ் அவர்கள் பொதுமக்களுக்கு கூறுவது என்னவென்றால்,

• சைபர் மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றி பல்வேறு இணைய மோசடிகளில் சிக்க வைக்கிறார்கள், இது அவர்களின் பணத்தை இழக்க வழிவகுக்கிறது.

• மேலும், மோசடிக்காரர்கள் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டிங் வர்த்தக தளத்தின் மூலம் முதலீடு உட்பட பல்வேறு வழிகளில் அவர்கள் வற்புறுத்தி பணத்தை முதலீடு செய்ய தூண்டுகின்றனர்.

• எனவே, எந்தவொரு தளத்திலும் முதலீடு செய்வதற்கு முன் எச்சரிக்கையாக இருக்குமாறு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது. எந்த முன்னறிவும் இல்லாமல் எந்த ஆன்லைன் பங்கு வர்த்தக தளத்திலும் பணம் செலுத்துதல்/முதலீடு செய்ய வேண்டாம்.

இது சம்மந்தமாக, உடனடியாக 1930 என்ற இணைய வழி காவல் நிலைய இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதற்கு இணைய வழி காவல்துறை ஆய்வாளர்கள் தியாகராஜன் மற்றும் கீர்த்தி, தலைமை காவலர் மணிமொழி, காவலர் வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவிற்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Over Rs 10 crore fraudulent in online stock trading Young man arrested!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->