தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு! வெளியான அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சம்பா பருவ சாகுபடியின் போது பருவமழை தொடங்கி விடும். ஆகையால், நெல் மூட்டைகள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனுடைய விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முன்கூட்டியே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மத்திய அரசுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்து இருந்தார். 

இந்த நெல் கொள்முதலை வழக்கமாக அக்டோபர் மாதத்திற்கு பதிலாக ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே செப்டம்பர் மாதத்தில் தொடங்குமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர்  மு க ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுள்ளது. 

இது குறித்து அறிவிப்பை பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக உறுப்பினர்களின் கேள்விக்கு அவர் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நெல் கொள்முதல் ஒரு மாதம் முன்கூட்டியே செப்டம்பர் மாதம் தொடங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், விதைப்பு காலத்திற்கு முன்பு குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்படும். இதனால், விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட பயிரை விதைப்பதற்கு முன்கூட்டியே முடிவை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paddy procurement will start in September


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->