பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாப்பம்மாள் விவசாயத்தில் சிறந்து விளங்கினார். இந்த நிலையில்,  பத்மஸ்ரீ விருது பெற்ற 110 வயதான பாப்பம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்.

விவசாயி சேற்றில் கால் வைக்கவில்லையெனில் யாருக்கும் சோறு கிடையாது என்ற வாசகத்திற்கு இணங்க,  விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021-ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு கோவை வந்த பிரதமர் மோடி, பாப்பம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.

பாப்பம்மாள் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், காலமானார். காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற உள்ள தி.மு.க. பவள விழாவை முன்னிட்டு பாப்பம்மாளுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் அவர் உயிரிழந்து இருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Padma shri awardee pappammal passes away


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->