கடன் தொல்லையால் பெயிண்டர் தற்கொலை, சென்னை அருகே நிகழ்ந்த சோகம்..!
Painter Committed Suicide in Chennai
கடன் பிரச்சனையால் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரு.வி.க.நகர், சந்திரசேகர் (47). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சந்திரசேகரனுக்கு சரியான வருமானம் இல்லாததால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், கடனை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இதில், அவர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவதன்ரு, தனது வீட்டின் மூன்றாம் மாடியில் இருந்து அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Painter Committed Suicide in Chennai