தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஏ.டி.எம்-களில் ஓவியங்கள்..! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர்- புதுக்கோட்டை சாலையில் காவேரி நகரில் யூனியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் அந்த வங்கியின் ஏற்பாட்டின்படி தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் வகையில் ஆயிரம் ஆண்டை கடந்த பெரிய கோவிலின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 

இதேப்போல், புவிசார் குறியீடு பெற்ற தலையாட்டி பொம்மைகள், கலை சிற்பங்கள் ஆகியவையும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. ஏ.டி.எம். மையம் அறை முழுவதும் தஞ்சையின் பெருமைக்குரிய அடையாளங்கள் இடம் பிடித்துள்ளதால் பணம் எடுக்க வருபவர்கள் அதனை பார்த்து ரசித்து செல்கின்றனர். 

தஞ்சையின் பெருமை பல வகைகளில் வெளிப்படுத்தி வரும் நிலையில் ஏ.டி.எம். அறையிலும் ஓவியமாக வரைந்துள்ளது வித்தியாசமாகவும், அதே வேளையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

மேலும், தஞ்சைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இந்த வங்கி ஏ.டி.எம்.மில் பண பரிவர்த்தனை செய்யும்போது இந்த ஓவியங்கள் மூலம் தஞ்சையின் பெருமைமிக்க அடையாளங்களை தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் பெருமைப்பட தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Paintings on ATM near thanjavur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->