பழனி | 2 தலை, 7 கால்கள், 2 வால் - அதிசய கன்று!
Palani 2 heads 7 legs miraculous calf born
புலியம்பட்டி பகுதியில் 2 தலை, 7 கால்கள், 2 வால் உடன் பிறந்த கன்றுவை பார்த்து ஆச்சரியமடைந்த பொதுமக்கள்:
பழனி அருகே, புலியம்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். இவர் கால்நடைகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவரது எருமை மாடு ஒன்று, கன்று ஈன்ற முடியாமல் சில மணி நேரமாக சிரமப்பட்டுக்கொண்டிருந்தது. அதனால் மகுடீஸ்வரன் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
அதற்காக பெருமாள் புதூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி டாக்டர் முருகன் தலைமையில் அம்பிளிக்கை கால்நடை மருத்துவர் மற்றும் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மருத்துவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி, அறுவை சிகிச்சை செய்து தாயின் வயிற்றில் இருந்து கன்றுவை பிரித்து எடுத்தனர்.
அந்த கன்றுக்கு 2 தலை, 7 கால்கள், 2 வால் என அனைத்தும் ஒட்டிய நிலையில் பிறந்த கன்றுவை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சர்யமடைந்து அந்த கன்றுவை அதிசய கன்று என்றனர்.
English Summary
Palani 2 heads 7 legs miraculous calf born