சூடு பறக்கும் தமிழக அரசியல் களம்; இபிஎஸ்-ஐ தொடர்ந்து, நாளை டெல்லி செல்லும் அண்ணாமலை..!
Following EPS Annamalai will go to Delhi tomorrow
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026 -இல்) நடைபெற உள்ள நிலையில், இதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்த நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து பேசியிருந்தார். இதன் மூலம் மீண்டும் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படுமா..? என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இது தமிழக அரசியலில் அனல் பறக்கும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து பேசியமாய் குறித்து கூறுகையில்,

கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை, முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினையை பேசுவதற்கு தான் அமித்ஷாவை சந்தித்தேன் என்றும், கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கை எப்போதும் நிலையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படுவது, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் என்ன சூழ்நிலை இருக்குதோ அதை பொறுத்தே கூட்டணி மாறும் என்றும், கூட்டணி இருக்கு இல்லை என்பதை இப்போது சொல்ல முடியாது என்றும், ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி மக்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காணும் கட்சி அதிமுக என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாளை (மார்ச் 27ந் தேதி) காலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி நேற்று அமித்ஷாவை சந்தித்த நிலையில், அண்ணாமலை நாளை அவரை சந்திக்கவிருப்பதாக வெளியாகி உள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Following EPS Annamalai will go to Delhi tomorrow