100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியுள்ள கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சகோதரி மற்றும் கணவர்..!
Cricketer Mohammed Shami sister and husband have worked on a 100day work program
பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சகோதரி மற்றும் அவரது கணவர் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றி சம்பளம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த முகமது ஷமி சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி 09 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 04 பேருடன் இணைந்து முகமது ஷமி இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தத் தொடரில் இந்திய அணி சாம்பியன் வென்றதும் முகமது ஷமியின் தாயார் மற்றும் சகோதரி இணைந்து மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முகமது ஷமியின் சகோதரி ஷபினா மற்றும் அவரது கணவர் இருவரும் 2021 முதல் 2024-ஆம் ஆண்டு வரை உ.பி.,யின் அம்ரோஹா மாவட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றியுள்ளனர். இதன் மூலம் சம்பளம் பெற்று உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த ஆவணங்கள் வெளியாகி உள்ளதாகவும் ஆங்கில மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து முகமது ஷமியோ, அவரது சகோதரியோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Cricketer Mohammed Shami sister and husband have worked on a 100day work program