பழனி | ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.! பதறும் பக்தர்கள்!
palani railway station bomb threat
பழனி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதனை அடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் போலீசார், பழனி ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பங்குனி உற்சவ திருவிழாவை முன்னிட்டு பழனியில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.
English Summary
palani railway station bomb threat