சபாநாயகர் கலந்து கொண்ட விழாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் இருந்து வந்த ஒரு பெண் திடீரென தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார். 

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தூக்கி எறிந்தனர். பின்னர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின்னர் நடத்திய விசாரணையில் அந்தப் பெண் பாளைமனக்கவாவலம் பிள்ளை நகரைச் சேர்ந்த பாலாஜி என்பவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 40) என்பது தெரிய வந்தது. 

இவர் அதே பகுதியைச் சேர்ந்தவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாகவும், அதற்காக அவர்கள் கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், இதனால்தான் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palayamkottai woman suicide attempt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->