குன்னூா் அருகே லாரி- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து! பயணிகளின் நிலை என்ன?! - Seithipunal
Seithipunal


மேட்டுப்பாளையத்தில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது: 

கோவை மாவட்டம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தது. 

இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தில் ஓட்டுநர் சுரேஷ் மற்றும் நடத்துனர் மனோகரன் என்பவர்கள் பணியில் இருந்தனர். 

ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்றை மணிகண்டன் என்பவா் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் குன்னூா்-பா்லியாறு அருகே பேருந்து சென்றபோது, டிப்பா் லாரியும் அரசு பேருந்தும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. 

இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதால், அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் நின்றுகொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா், அணிவகுத்து நின்ற வாகனங்களை, சுமாா் 1 மணி நேரம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து, விபத்து குறித்து குன்னூா் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paliaru road lorry Govt bus collision


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->