பல்லடம் | மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு! கொந்தளிப்பில் மக்கள்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம், பல்லடம் செட்டிபாளையத்தில் காலையில் மூடப்பட்ட டாஸ்மார்க் கடை, மாலையில் மீண்டும் திறக்கப்பட்ட அவல நிலை அரங்கேறியுள்ளது.

பல்லடம் அருகே செட்டிபாளையத்தில் இயங்கி வந்த டாஸ்மார்க் கடையால் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் அளித்தருந்தனர்.

இதனை அடுத்து அந்த டாஸ்மாக் கடை காலை மூடப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து டாஸ்மார்க் கடை இனி செயல்படாது என்று வட்டாட்சியர் அறிவித்திருந்தார்.

அதன்படி டாஸ்மார்க் கடையும் மூடப்பட்டது. பொதுமக்களும் டாஸ்மார்க் கடை மூடியதை பட்டாசு வெடித்து கொண்டாடியிருந்தனர். 

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வது குறித்து ஆட்சியர் முடிவு எடுப்பார் என்றும் வட்டாட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று மாலை அந்த டாஸ்மாக் கடை மீண்டும் திறந்து மது விற்பனை தொடங்கி இருப்பது பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துள்ளது.

மீண்டும் திறக்கப்பட்ட இந்த டாஸ்மார்க் கடை முன்பு பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில், பல்லடம் பகுதியில் டாஸ்மார்க் மது போதையில் மூன்று பேர் நடத்திய தாக்குதலில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியதும் இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Palladam TASMAC Shop Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->