தொடரும் மீனவர்கள் கைது.. பாம்பனில் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்..!! - Seithipunal
Seithipunal


இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ராமேஸ்வரத்தின் பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மூன்று நாட்டுப் படகுகளில் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இதையடுத்து அந்த படகுகளில் இருந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இருதயராஜ், கிரேசியன், லியோனஸ், ஆரோக்கிய மெக்ரின், டிகாஸ், மெக்கெல், தயாளன், முருகன், சக்தி செல்வம், இசக்கி முத்து, களஞ்சியம், ராஜன், ஜார்ஜ், கென்னடி, தாஸ், அந்தோணி, தேவதாஸ், லாரன்ஸ், சூசை ராஜ் ஆகிய 19 மீனவர்களையும், அவர்கள் சென்ற 3 நாட்டுப் படகுகளையும், மேலும் தனுஷ்கோடியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற ஒரு நாட்டுப் படகுடன் அதில் இருந்த 6 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இன்று அதிகாலையில் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்துள்ள 25 மீனவர்களையும், மேலும் பறிமுதல் செய்த 4 நாட்டுப் படகுகளையும் இலங்கை கடற்படை விடுவிக்க கோரி இன்று காலை பாம்பன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாம்பன் பாலத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனால் ராமேஸ்வரம்  - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இந்த போராட்டங்களில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் பெண்கள் மீனவ தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pamban Fishermen Protest Against Fishermen Arrest


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->