சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள்.. பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளூர் எஸ். பி வழங்கினார்.
Pamphlets containing road safety norms Tiruvallur S School Students B offered
திருவள்ளூர் எஸ். பி அலுவலகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு :
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தி சீனிவாச பெருமாள் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, போதை பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாள சீனிவாச பெருமாள் பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் போதை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெயர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குறித்தும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், காவல் உதவி செயலி மற்றும் குழந்தை திருமணம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட காவல் அலுவலக சுற்று சுவரில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்த அரசு பள்ளி மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கியதுடன் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள், திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, திருவள்ளூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Pamphlets containing road safety norms Tiruvallur S School Students B offered