பெண் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை முயற்சி.. துணைதலைவர் மீது குற்றசாட்டு..! - Seithipunal
Seithipunal


பெண் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், மேலூர் கிராம ஊராட்சியில் ரேணுகாதேவி என்பவர்  ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். நேற்று இவரது வீட்டில் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில், மேலூர் ஊராட்சியில் துணை தலைவராக இருக்கும் நாகராஜ் என்பவர் எப்போதும் மோதல் போக்குடன் செயல்பட்டுகிறார்.

அதே போல எந்த வித வளர்ச்சி பணிகளையும் செயல்பட்டு வருகிறார். இதுபோன்ற காரணங்களால் மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதனை அடுத்து, இந்த சம்பவத்திற்கு துணைதலைவர் மறுப்பு தெரிவித்தோடு அவரின் முறைக்கேட்டை கண்டறிந்தது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதால் திசை திருப்புவதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

panchayat leader attempt suicide


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->