பரந்தூர் விமானநிலையம் அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்வது மாநில அரசின் கடமை - அமைச்சர் வி.கே.சிங்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள மொத்தம் பதின்மூன்று கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கு அரசு முடிவு எடுத்துள்ளது. 

இந்த நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் கிரி.ராஜன் கேள்வி எழுப்பினார். 

அதற்கு மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது, "டிட்கோ மற்றும் தமிழக அரசு இட அனுமதி வழங்க கோரி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளது.

அந்த விண்ணப்பங்கள் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் கலந்து ஆலோசனை செய்து மத்திய விமான போக்குவரத்து துறையின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். டிட்கோ தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தின் படி பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு 4 ஆயிரத்து 791 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

தேவையான இடம் கிடைத்த பிறகு தான் பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் காலத்தை நிர்ணயிக்க முடியும். இந்த விமான நிலையத்திற்கான இடத்தை இறுதி செய்வது மாநில அரசின் கடமை" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paranthur airport issue minister vk singh written information


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->