பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு! 8வது முறையாக தீர்மானம்!
Paranthur Airport Yekanapuram Grama Sabha
பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் மிகப்பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்க தமிழக அரசு இடம் தேர்வு செய்துள்ளது.
இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக அண்மையில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இந்த விமான நிலையத்திற்கான 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
ஆனால், இந்த விமான நிலையத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமம் உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய கிராம மக்கள் தொடர்ந்து 752 வது நாளாக போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிரடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்,
ஏற்கனவே கடந்த ஏழு முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இந்த விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஆறு முறை இந்த விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தும் உள்ளனர்.
தற்போது எட்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஒரு விமான நிலையத்திற்காக பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க கூடாது என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Paranthur Airport Yekanapuram Grama Sabha