செம்ம! தமிழகத்திற்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட குடியரசு தலைவர் திரவுபதி முர்மு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேச மாநிலத்தில் பாதுகாப்பு துறை தொழில்பேட்டைகள் அமைக்கப்படும் என்று, குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். 

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ளதால் தொழில்துறை பலனடைந்துள்ளது என்றும், பாதுகாப்புத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் அதிகரித்து வருவதாக குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.

55 கோடி மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், வரும் ஜூலை முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரும் என்றும் குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் அவரின் உரையில், உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது. உலக பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு வழங்குகிறது.

வந்தே பாரத் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமரின் கிராமப்புற சாலை வசதி திட்டம் கிராமப்புற உள்கட்டமைப்புகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

குடியரசு தலைவர் உரையின் போது "நீட், நீட்" என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். அதற்க்கு குடியரசு தலைவர், "போட்டி தேர்வுகளில் வினாத்தாள் கசிவதை தடுக்க, கடும் தண்டனை விதிக்கும் வகையில், புதிய சட்டத்தை அரசு இயற்றியுள்ளது.

வினாத்தாள் கசிவுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். வினாத்தாள் கசிவு பிரச்சனைகளை களைய கட்சி, அரசியலைத் தாண்டி நாம் ஒன்றிணைய வேண்டும்" என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament President Draupadi Murmu announce for Tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->