இன்னும் 3 நாளில் அமலுக்கு வரும் சட்டம்! இந்தியாவின் கருப்பு தினம் - அதிரவைத்த குடியரசு தலைவர்! - Seithipunal
Seithipunal


கடந்த  திங்கள்கிழமை 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதல் இரண்டு நாள்களில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். 

இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற மக்களவைத் தலைவருக்கான தேர்தலில், பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றி உள்ளார். அவரின் உரையின் விவரம் பின்வருமாறு:

"உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா அடைந்துள்ளது. உலக பிரச்சனைகளுக்கு இந்தியா தீர்வு வழங்குகிறது.

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுகிறது. நாட்டில் உள்ள 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்குவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வந்தே பாரத் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். 

வரும் ஜூலை முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வரும். இனி தண்டனை அல்ல, புதிய சட்டங்கள் மூலம் நியாயம் கிடைக்கும். நாடு சுதந்திரத்திற்கு பின் செய்திருக்க வேண்டிய புதிய குற்றவியல் சட்டத்தை அரசு தற்போது செய்துள்ளது. 

காசி தமிழ் சங்கம், சௌராஷ்டிரா தமிழ் சங்கம் போன்ற நிகழ்ச்சிகள் அரசு தொடங்கியுள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த தயாராக உள்ளோம். 

ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை தகர்க்கும் செயலில் ஈடுபடக்கூடாது. வதந்திகளை பரப்பக் கூடாது, தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை குறைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும், இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்திய எமர்ஜென்சி குறித்து குடியரசுத் தலைவர் பேசியதால் அவையில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 

50 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி ஒரு கருப்பு தினம் என்று குடியரசு தலைவர் பேசினார். எமர்ஜென்சி என்பது இந்திய சாசனத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்றும் குடியரசுத் தலைவர் தெரிவித்தார். மேலும் எமர்ஜென்சி இந்திய ஜனநாயகத்தின் இருண்ட காலம் எனவும் குடியரசு தலைவர் தெரிவித்தார். 

புதிய மருத்துவக் கல்லூரிகள் குறித்து குடியரசு தலைவர் பேசும்போது, எதிர்க்கட்சி எம்பிகள் நீட் என்று முழக்கமிட்டனர். பாதுகாப்பு துறை குறித்து குடியரசு தலைவர் பேசிய போது அக்னிவீர் என்று எதிர்கட்சிகள் முழக்கமிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliament President Draupadi Murmu Speech BJP vs Congress


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->