பாராளுமன்ற தொகுதி எம்.பி. மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஆக உள்ள செல்வராஜ், திருவாரூர் கோவில் சித்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து செல்வராஜ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

அப்போது திடீரென அவருக்கு நுரையீரல் தோற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதி அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் செல்வராஜ் எம்.பி. நல்ல நிலையில் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliamentary Constituency MP Admit hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->