வாக்கு எண்ணிக்கை! தமிழகத்திற்கு 2 நோட்டா அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக பாராளுமன்ற மக்களவை பொது தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகின்ற 4 ஆம் தேதி காலை முதல் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படும். சுமார் மதியம் 2 மணிக்கு மேல் மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார் என்பதும் தெரிந்து விடும்.

இதற்கிடையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க போவதாக கருத்துக்கள் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படலாம் என்றும்,பாஜக கூட்டணி ஒன்று முதல் மூன்று இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் வெளியான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது நியமனம் செய்யப்பட்டுள்ள பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க இரண்டு நோடல் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

நோடல் அதிகாரிகளாக கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ஆனி ஜோசப், பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்த இரண்டு நோடல் அதிகாரிகளும் தேர்தல் பார்வையாளர்கள் தொடர்பான பணிகளை ஒருங்கிணைப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parliamentary Election TN Vote Counting Appointment Nodal Officers 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->