ஓடும் பேருந்தில் இருந்து கழண்டு விழுந்த பாகங்கள்...அதிர்ச்சியில் பயணிகள்..! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் நோக்கி அரசுப் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அங்குள்ள பூ மார்க்கெட் அருகே பேருந்து வந்த போது, பேருந்தில் இருந்து ஒரு பகுதி நடுரோட்டில் கழண்டு கீழே விழுந்தது. 

பேருந்தில் இருந்து இரும்பு கம்பி மற்றும் பலகை சாலையில் கீழே விழுந்து சிதறிய நிலையில், பேருந்துக்கு பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து சிக்காமல் தப்பினர். இதையடுத்து, பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துநரும் கீழே இறங்கிச் சென்று சிரித்தபடியே கீழே சிதறிக் கிடந்த பேருந்தின் பாகங்களை எடுத்துச் சென்றனர். 

இதனை கண்ட பேருந்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, மதுரை மாநகரில் பெரும்பாலான பேருந்துகள் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால், முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Parts fell running bus passengers shock


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->