அயனாவரத்தில் இருந்து பிரிந்த பாசமிகு ஊர்....உதயமான புதிய வருவாய் வட்டம் !
Pasamigu town separated from Ayanavaram new revenue circle emerging
சென்னையில் உள்ள கொளத்தூரை தலைமையிடமாக கொண்டு, புதிய வருவாய் வட்டத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசிதழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள அரசிதழில், அயனாவரம் வருவாய் வட்டத்தில் இருந்து, கொளத்தூர் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொளத்தூர், பெரவள்ளூர், சிறுவள்ளூர் ஆகிய 3 வருவாய் கிராமங்களை தனது ஆட்சி எல்லைகளாக அமைத்து கொளத்தூர் வருவாய் வட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கொளத்தூர் வட்டத்தில் 3,78,168 பொதுமக்கள் வசிப்பதாகவும், 6.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பொதுப் பிரிவு, சமூக பாதுகாப்பு பிரிவு, நகர்ப்புற நிலவரித் திட்டம், வட்ட கலால் அலுவலகம், நில அளவை பிரிவு உள்ளிட்ட அரசுத்துறை அலுவலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், முதுநிலை மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர், ஓட்டுநர் உள்ளிட்ட 36 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 - 2025 ஆண்டில் மீதமுள்ள 8 மாதங்களுக்கான தொடர் செலவினங்களுக்கு 1.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், தொடரா செலவினங்களுக்கு 32 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Pasamigu town separated from Ayanavaram new revenue circle emerging