"சுத்தி சுத்தி வருகிறோம்" - கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் வேதனை.!  - Seithipunal
Seithipunal


கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான பேருந்துகளை அடையாளம் காணுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் அதிநவீன வசதிகளுடன் சுமார் 393 கோடி ரூபாயில் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை கடந்த சனிக்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்தப் புதிய பேருந்து முனையத்தில் முறையான தகவல் இல்லை என்றும், போதிய வழிகாட்டுப் பலகைகள் இல்லை என்றும், பேருந்துகளை அடையாளம் காணமுடியவில்லை என்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், மாநகரப் பேருந்து நிலையம் இருக்குமிடத்திலிருந்து, பேருந்து முனையம் செல்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

passangers protest in kilambakkam bus stand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->