பேருந்துகளை சிறைபிடித்த பயணிகள் - கிளம்பாக்கத்தில் பரபரப்பு.!
passangers protest in kilambakkam bus stand
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கு இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து தான் அரசு பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகள் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதாலும் பயணிகள் ஆத்திரமடைந்து பேருந்துகளை சிறைபிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக பயணிகளிடம் உறுதி அளித்தனர். இருப்பினும், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
English Summary
passangers protest in kilambakkam bus stand