#தஞ்சை | மணல் கடத்தலை தடுக்க முயன்ற போலீசார் மீது, வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி!
Pattukottai Sand Mafia Attack Police
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே காட்டாற்றில் அதிக அளவு மணல் திருட்டு நடப்பதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து பட்டுக்கோட்டை காவல் நிலைய போலீசார் சரவணன், சதீஷ்குமார் ஆகியோர் தங்களது இருசக்கர வாகனத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அந்நேரம், பட்டுக்கோட்டை கார்காவயல் பகுதியில் மணல் அள்ளிக்கொண்டு மினி சரக்கு வாகனம் ஒன்று வேகமாக வந்துள்ளது.
அந்த வாகனத்தை போலீசார் இருவரும் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால்,அந்த வாகனம் நிறுத்தாமல், இரண்டு போலீசார் மீது மோதி விட்டு தப்பி சென்றுள்ளது.
இந்த கொலை முயற்சி சம்பவத்தில் பலத்த காயமடைந்த போலீசார் சரவணன், சதீஷ்குமார் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த கொலை முயற்சி தொடர்பாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், மினி சரக்கு வாகனத்தின் உரிமையாளரான பண்ணவயல் ராஜா என்பவரை கைது செய்து அந்த மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவாக உள்ள மினி சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நிஷாந்தை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
Pattukottai Sand Mafia Attack Police