நாட்டு நலப்பணி திட்டத்திற்கான நிதியை பள்ளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த முடிவு - கல்வித்துறை.!
pay nss scheme fund in to school bank account educational department decision
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது. அதன் படி, இந்தக் கல்வி ஆண்டு முதல் நாட்டு நலப்பணி திட்டத்திற்கான நிதியை பள்ளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதற்காக அனைத்து அரசுப் பள்ளிகளும் எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும். அதற்கான விவரங்களை தொகுத்து பள்ளிக்கு கல்வித்துறை இயக்குநரகத்துக்கு ஜன.20-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், இது தொடர்பான மறு உத்தரவு வரும் வரை என்எஸ்எஸ் வங்கிக் கணக்குகளை எக்காரணம் கொண்டும் முடிக்கக் கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்" என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
pay nss scheme fund in to school bank account educational department decision