ச்சீய்!!! ஆத்திரத்தில் தொல்லை கொடுத்த குரங்கை சமைத்து சாப்பிட்ட நபர்கள்....
People who cooked and ate a monkey in anger after causing trouble
திண்டுக்கல் வீர சின்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த 33 வயதான ராஜாராம் என்பவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு சொந்தமாக மாந்தோப்பில், சில தினங்களாக குரங்குகள் புகுந்து மாங்காய் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை நாசம் செய்துள்ளது.
மன உளைச்சலுக்கு ஆளான ராஜாராம், தவசிமடை வடுகுப்பட்டியை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி ஜெயமணியை சந்தித்து குரங்குகளை கொல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பின்னர் தன் தோட்டத்தில் உள்ள குரங்குகளை கொல்ல ரூபாய் ஆயிரம் பணம் கொடுத்து டீல் பேசியுள்ளார்.

நாட்டு துப்பாக்கி:
இதுக்கு சம்மதம் தெரிவித்த ஜெயமணி தன்னிடம் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் குரங்கை சுட்டு கொன்றார். இதில் வெறுக்கத்தக்க விதமாக, துப்பாக்கியால் கொன்ற குரங்கை அங்கேயே இருவரும் சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த செய்தி அறிந்த சிறுமலை ரேஞ்சர் மதிவாணன், வானவர் அப்துல் ரகுமான் தலைமையிலான வனத்துறையினர் வடுகப்பட்டி பகுதியில் உள்ள ஜெயமணி பிடித்து விசாரணை செய்தனர்.
இதில் ராஜாராம் பணம் கொடுத்து ஜெயமணியிடம் குரங்குகளை கொல்ல சொன்னது தெரியவந்தது.இதில் இருவரையும் வனதுறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து குரங்கு தோல், நாட்டுத் துப்பாக்கி, வெடி மருந்து போன்ற பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பான விசாரணையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
People who cooked and ate a monkey in anger after causing trouble